வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. பொதுத்துறை வங்கிகளில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் வேலை: ஐபிபிஎஸ் அறிவிப்பு
வங்கித் துறையில் பணிபுரிவதே இலக்காகக் கொண்டு தேர்வுக்கு தயாராகி வரும் இருபாலர்களுக்குமான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
வங்கித் துறையில் பணிபுரிவதே இலக்காகக் கொண்டு தேர்வுக்கு தயாராகி வரும் இருபாலர்களுக்குமான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையமான இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.
அது குறித்த விவரங்கள் பார்ப்போம்...
பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா என நாட்டுடைமையாக்கப்பட்ட 11 வங்கிகளில் 2026 - 27 ஆம் ஆண்டிற்கான ஐடி அலுவலர், வேளாண் கள அலுவலர், ராஜ்பாஷா அலுவலர், சட்ட அலுவலர், மனிதவளம், பணியாளர் அலுவலர், சந்தைப்படுத்தல் அலுவலர் என 745 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு ஆகஸ்ட் மாதமும், முதன்மைத் தோ்வு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும். வங்கிகளின் தேவைகளுக்கேற்ப நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்.
Advertisement
Advertisement
இதற்கு, தகுதியான இருபாலர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் ஜூலை 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Specialist Officers
மொத்த காலியிடங்கள்: 745
வயது வரம்பு : 21.7.2026 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
ஐடி அலுவலர்(IT Officer)பணிக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் துறையில் Computer Science, Computer Application, Information Technology,Electronics, Electronics & Telecommunication,Electronics & Communication, Electronics & Instrumentation Engineering ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேளாண் கள அலுவலர்(Agricultural Field Officer)பணிக்கு விண்ணப்பிப்போர் Agriculture, Horticulture,Animal Husbandary, Veterinary Science,Dairy Science,Fishery Science,Pisciculture, Agri. Marketing & Co-Operation, Co-Operation & Banking, Agro Forestry, Forestry, Agricultural Biotechnology, Food Science,Agriculture Business Management,Food Technology,Dairy Technology, Agriculture Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் 4 ஆண்டு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ராஜ்பாஷா அலுவலர் (Rajbhasha Adhikari)பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதாவதொரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
சட்ட அலுவலர்(Law Officer)பணிக்கு விண்ணப்பிப்போர் எல்எல்பி பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மனிதவளம், பணியாளர் அலுவலர்(HR,Personnel Officer)பணிக்கு விண்ணப்பிப்போர் Personnel Management, Industrial Relations,HR,HRD,Social Work,Labour Law போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம், முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: சந்தைப்படுத்தல் அலுவலர்(Marketing Officer) பணிக்கு விண்ணப்பிப்போர் Marketing பிரிவில் MMS, MBA அல்லது 2 ஆண்டு PGDBA,PGDBM,PGPM,PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வு தேர்வு நடைபெறும் மாதம்:
ஆகஸ்ட் 2026.
தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, நாகர்கோயில், சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, கரூர், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி.
முதன்மைத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர் 2026.
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி, கோயம்பத்தூர், நாமக்கல்
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.175, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.7.2026.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
IBPS Recruitment Notification 2026-27 for Bank Specialist Officers Post....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.