ரசாயன மற்றும் உரங்கள் நிறுவனத்தில் அலுவலர், பொறியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?
ரசாயன மற்றும் உரங்கள் நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறித்து...
உரங்கள் மற்றும் தொழில்துறை ரசாயனங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள, சுமார் ரூ. 17146.74 கோடி விற்பனை வருவாயைக் கொண்ட ஒரு முன்னணி லாபம் ஈட்டும் "நவரத்னா" நிறுவனமான ராஷ்டிரிய ரசாயன மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
பணி: Officer
Advertisement
Advertisement
பிரிவு : Finance
தகுதி: சிஏ, சிஎம்ஏ பிரிவில் தேர்ச்சி அல்லது வணிகவியல், நிதியியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: HR
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Personnel,Social Work, Welfare, Industrial Relations, Labour Studies பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Medical
தகுதி : எம்பிபிஎஸ் முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பிரிவு: Legal
தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சட்டப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயது வரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Sr. Manager(CCLab)
தகுதி: வேதியியல் பிரிவில் முனைவர் பட்டம் அல்லது Chemical, Petrochemical Engineering,Chemical Technology பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயது வரம்பு: 52-க்குள் இருக்க வேண்டும்
பணி: Assistant Engineer(Electrical)
தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 1,20,000
வயது வரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineer, Sr.Engineer, Dy. Manager (Electrical)
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எரிசக்தி, எலக்ட்ரிக்கல் எரிசக்தி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயதுவரம்பு: 34-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineer,Sr. Engineer (Civil)
தகுதி : பொறியியல் துறையில் Civil, Construction Engineering பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 36-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் தவிர, இதர பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Rashtriya Chemicals and Fertilizers Limited is a leading profit making “Navratna” company in the business of manufacturing and marketing of Fertilizers and Industrial Chemicals having sales turnover around Rs. 17146.74 crores.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.