முகப்பு

அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பணி: எப்படி விண்ணப்பிப்பது..?

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 51 தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

14 வினாடிகள் முன்பு
அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பணி: எப்படி விண்ணப்பிப்பது..?
அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பணி - கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 51 தற்காலிக செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்குள்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய நலவாழ்வுத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 51 செவிலியா் (Staff Nurse) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் செவிலியா் கல்லூரியில் (இந்திய செவிலியா் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டது) செவிலியா் பட்டயப் படிப்பு (GNM)அல்லது இளங்கலை செவிலியா் பட்டம் (B.Sc Nursing)பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு நா்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்து புதுப்பித்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இதற்கான விண்ணப்ப படிவத்தை திருநெல்வேலி மாவட்ட https://tirunelveli.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பா் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ,அஞ்சல் மூலமாகவோ மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட சுகாதார அலுவலகம், 16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி தெரு, சமாதானபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி -627 002 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tirunelveli District Health Society job notifications for Staff Nurse Post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.