FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கும் பணி தொடக்கம்

குழந்தைகள் நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கும் பணி குறித்து...

விழாவில் பங்கேற்ற விழுப்புரம் எம்.பி. துரை ரவிக்குமார். - டிஎன்எஸ்
பகிர்:

விழுப்புரம்: குழந்தைகள் நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ். ஏ. ராமன், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், விக்கிரவாண்டி எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்.

Advertisement

Advertisement

குழந்தைகள் நாளையொட்டி கேக் பெற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 1.80,928 மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி , கோட்டாட்சியர் ஏகாம்பரம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Distribution of cakes to school children begins in Villupuram district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.