டிஆர்டிஓ-ல் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
டிஆர்டிஓ-ல் பொறியியல் பட்டதாரிகளுக்கு அளிக்கப்படும் ஊதியத்துடன் கூடிய பயிற்சி தொடர்பாக...
இந்தியா ராணுவத்தின் கீழ் செயல்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் (டிஆர்டிஓ) ஊதியத்துடன் கூடிய 6 மாத பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: 625 / HR/Paid Interdnship/2026/M/01
பயிற்சியின் பெயர்: DRDO Paid Interdnship
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 65
உதவித்தொகை: மாதம் ரூ.5,000
தகுதி: பொறியியல் துறையில் இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், மின் பொறியியல், மெட்ரீயல் சயின்ஸ், குவாண்டம் தொழில்நுட்பம், லேசர் ஒளியியல், குறைக்கடத்தி சாதனங்கள் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் இறுதியாண்டு கடைசி செமஸ்டர் தேர்வு எழுதுபவர்கள் அல்லது எம்.எஸ்சி, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்கும் மாணவர்கள் முந்தைய செமஸ்டர் தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: SOLID STATE PHYSICS LABORATORY, LUCKNOW ROAD, TIMARPUR, DELHI – 110054
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத் துச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, SSPL, DRDO., Lucknow Road, Timapur, Delhi PIN-110 05
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Applications are invited from bright and young students for a 6-month Paid Internship to work in research areas of national importance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.