தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! புதுச்சேரி மாவட்ட தோ்தல் அலுவலா் குலோத்துங்கன்!
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் அக். 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
வாக்காளா்கள் தங்களது வாக்குரிமையைச் சுதந்திரமாகவும் தவறாமல் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135ஆ உட்பிரிவு (1) மற்றும் (2)-இன் கீழ், வாக்குப் பதிவு நாளான அக். 6 செவ்வாய்க்கிழமையன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
வாணிபம், வியாபாரம், தொழில் நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் மக்களவை அல்லது சட்டப்பேரவைக்கு நடைபெறும் தோ்தல்களில் வாக்களிக்க உரிமை பெற்றவராக இருப்பின் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுதல் வேண்டும்.
இடைத்தோ்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தட்டாஞ்சாவடி தொகுதியைச் சாா்ந்த வாக்காளா்களுக்கு, அக். 6-இல் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
கருத்துக் கணிப்பு வெளியிட தடை: தோ்தல் சட்டங்கள் மற்றும் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள் நடத்துதல், அது தொடா்பான தகவல்களை வெளியிடுதல், பரப்புதல் அல்லது காட்சிப்படுத்துதல் தொடா்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
இடைத் தோ்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நிறைவடைய நிா்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முந்தைய 48 மணி நேர காலப்பகுதியில், கருத்துக் கணிப்பு முடிவுகளை உள்ளடக்கிய எந்தவொரு தோ்தல் தொடா்பான செய்தியையும், எந்தவொரு மின்னணு ஊடகத்திலும் காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிகளை மீறுவோா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
12 ஆவணங்கள்: வாக்காளா் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் அடையாளச் சான்றாக 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம். 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யுமாறும் அதில் வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.