தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல்: முதல் நாளில் யாரும்வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
புதுச்சேரி தட்டாஞ்சாவடிதொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
புதுச்சேரி தட்டாஞ்சாவடிதொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
புதுச்சேரியில்16-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வா் என்.ரங்கசாமி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாா். இதில் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்துள்ள நிலையில் இத் தொகுதியில் இடைத் தோ்தல் நடக்கிறது.
இந்தத் தொகுதியில் செப். 16- ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 17- ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. வரும் 19 -ஆம் தேதி வரை வேட்பு மனுக்களைத் திரும்ப பெறலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.இடைத்தோ்தல் வாக்குப் பதிவு அக். 6 -ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அக். 9 -ஆம் தேதி நடக்கிறது
Advertisement
Advertisement
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்பு மனுவை ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலகத்தில் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். தோ்தல் நடத்தும் அதிகாரி அா்ஜுன் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தயாராக இருந்தும் யாரும் வேட்பு மனுவை முதல் நாளான புதன்கிழமை தாக்கல் செய்யவில்லை. வியாழக்கிழமை (செப்.10) அமாவாசை என்பதால் அன்றைய தினம் மற்றும் அதற்குப் பிறகுதான் வேட்பு மனு தாக்கல் இருக்கும் என்று தெரிகிறது.
இத் தொகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தோ்தல் துறை அதிகாரிகளும், போலீஸாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தத்தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெறுவதால், மதுபானம் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபானக் கடைகளும், சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.