முகப்பு
அரசுப் பணிகள்

ரூ.50,000 சம்பளத்தில் இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா?

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

Updated On : 22 ஏப்ரல் 2023, 1:30 pm IST
பகிர்:


திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: தட்டச்சர் - 1
சம்பளம்: 18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு பிரிவில் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை, ஆங்கிலத்தில் இளநிலை அல்லது தமிழில் இளநிலை, ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: உதவி மின்பணியாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: மின், மின் கம்பிப்பணியாளர் பிரிவில் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து 'எச்' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பணி: காவலர் - 4
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். 

பணி: பெருக்குபவர் - 1
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, அனுபவம், செய்லமுறை தேர்வுகள், கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயில் இணையதளத்தில் கொண்டுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்தோ,  தயார் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.5.2023

மேலும் விவரங்கள் அறிய www.tnhrce.gov.in அல்லது www.thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளலாம்.

இங்கே கிளிக் செய்யவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments