சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வெழுதியிருக்கும் மாணவ, மாணவர்களின் மிகப்பெரிய கேள்வி, தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது?
பெற்றோர் மற்றும் மாணவர்களின் இந்த கவலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில ஊடகங்கள், தினந்தோறும் இன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்று செய்திகளை வெளியிட்டுவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்.
ஆனால், அதனைப் பார்க்கும் ஒரே ஒரு பெற்றோர், உடனடியாக மற்றவர்களுக்கு அதனைப் பகிர, நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற புரளி காட்டுத் தீ போல பரவி, அனைவரும் அதே ஊடகச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
Advertisement
Advertisement
உண்மையில், சிபிஎஸ்இ நேரடியாக தேர்வு முடிவுகளை வெளியிடுமே தவிர முன்கூட்டியே எந்த அறிவிப்பையும் வெளியிடாது.
எனவே மாணவர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தை மட்டும் நாள்தோறும் பார்த்துக் கொள்ளலாம். மாணவர்கள் முன்கூட்டியே உமங் செயலி அல்லது டிஜி லாக்கரில் தங்களது விவரங்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள சிபிஎஸ்இ நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. தேர்வு முடிவுகளின்போது எந்த விவரங்களையும் அளிக்காமல் நேரடியாக மதிப்பெண்களை அறிய இது உதவும்.
அடுத்து சிபிஎஸ்இ மாணவர்கள் பலரும் டிஜி லாக்கரில் தங்களது தேர்வு விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக் கொண்டால் தேர்வு முடிவுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளால் அளிக்கப்படும் ஏபிஏஏஆர் அடையாள எண் கொண்டும் டிஜி லாக்கரில் உள் நுழைந்து தகவல்களை முன்கூட்டியே பதிவு செய்து தேர்வு முடிவு வெளியானதும் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். ஏபிஏஏஆர் எண் இல்லாவிட்டால் மாணவர்கள் தங்களுக்கு என டிஜி லாக்கரில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
டிஜிலாக்கரிலிருந்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாணவர்கள் டிஜிலாக்கரிலிருந்து தங்கள் மதிப்பெண் தகவல்களை பதிவிறக்கம் செய்ய எளிமையான வழிகள் உள்ளன.
அதன்படி, டிஜிலாக்கர் இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது டிஜிலாக்கர் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது பள்ளியில் கொடுத்த அடையாள எண்களைக் கொண்டு உள்நுழையவும்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
மாணவர்களின் பதிவு எண் மற்றும் பள்ளியின் பெயர் உள்ளிட்டத் தகவல் போன்ற தேவையான விவரங்களை அந்தப் படிவத்தில் உள்ளிடவும்.
தேர்வு முடிவுகள் வெளியானதும் மதிப்பெண் விவரங்களை டிஜி லாக்கரிலிருந்து பதிவு செய்து கொள்ளலாம். சிபிஎஸ்இ இணையதளங்கள் ஒரே நேரத்தில் பலரும் தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, பல்வேறு டிஜிட்டல் முறைகளில் தேர்வு முடிவுகளைப் பார்க்க சிபிஎஸ்இ வழிவகை செய்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை https://results.cbse.nic.in/ போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
How to download CBSE Class 10 and 12 exam results on DigiLocker?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.