ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம் - புகைப்படங்கள்
செயிண்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ தேவாலயத்தில் அரச பாரம்பரிய முறைப்படி ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிப் பயணத்தை தொடங்கும் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அபே கொண்டு வரப்பட்டு, ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெற்றது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத் உடல் அடங்கிய சவப்பெட்டி.
ஸ்வீடனின் ராணி சில்வியா, கிங் கார்ல் குஸ்டாவ் XVI, டென்மார்க்கின் ராணி மார்கிரேத் II, ஸ்பெயினின் மன்னர் ஃபிலிப், ராணி லெடிசியா, பெல்ஜியத்தின் ராணி மாடில்டே, மன்னர் பிலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திலிருந்து ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டியை எடுத்துச் செல்லும் 1 வது பட்டாலியன் கிரெனேடியர் காவலர்கள்.
இம்பீரியல் ஸ்டேட் கிரீடம், இறையாண்மையின் உருண்டை மற்றும் செங்கோல் உடன் பீரங்கி வண்டியில் செல்லும் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் அடங்கிய சவப்பெட்டி.
வின்ட்சர் கோட்டைக்கு வந்தடைந்த ராணி இரண்டாம் எலிசபெத் உடல் அடங்கிய சவப்பெட்டி சுமந்து வரும் ராயல் ஸ்டேட் ஹார்ஸ் வண்டி.
டொராண்டோவில் உள்ள 'இளவரசி ஆஃப் வேல்ஸ்' திரையரங்கைக் கடந்த செல்லும் ஒரு நபர். மேலே ராணி எலிசபெத் படம் திரையிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.