பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் புதிய தமிழ் தொடர் நான்கு எபிசோடுகளுடன் வெளியாகிறது.
திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் கணவன், மனைவி, வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் தெரியாத அந்நியர்களைப் போல நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்னவாகும் என்ர கேள்விக்கு நகைச்சுவை கலந்த பதிலுடன் ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த புதிய தொடர் அறிமுகமாகிறது.பிரதீப் ஆண்டனி மற்றும் ஸ்மேஹா மணிமேகலை ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் அறிவு மற்றும் ஐஸ்வர்யாவாக நடித்துள்ளனர்.பணிபுரியும் இளம் தம்பதிகளின் வாழ்க்கைப் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் கார்ப்பரேட் வாழ்க்கையின் அன்றாட யதார்த்தங்களையும் இந்தத் தொடர் பேசுகிறது.அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த அனுபவங்களை நகைச்சுவையான சூழல்களாக மாற்றியிருப்பதுதான் 'மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்' தொடரின் சிறப்பு.