FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நிகழ்வுகள்

அறிமுகமானது ஹோண்டா எலிவேட்  எஸ்யூவி - புகைப்படங்கள்

இந்தியாவில் கார் பிரியர்கள் மத்தியில் எஸ்யூவி கார்களுக்கு அமோக வரவேற்பு உள்ள நிலையில் இந்தியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி காரான ஹோண்டா எலிவேட் இன்று (ஜூன் 6) அறிமுகமானது.

Updated On : 6 ஜூன் 2023, 7:10 pm IST
புது தில்லியில் நடைபெற்ற புதிய ஹோண்டா எலிவேட் வெளியீட்டு விழாவில் ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டகுயா சுமுரா மற்றும் பலர்.
பகிர்:
எலிவேட் எஸ்யுவி யில் 360 டிகிரி பின்புற கேமரா வசதி, பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உடன் வருகிறது.
புதிய ஹோண்டா எலிவேட் 10-இன்ச் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் பிரீமியம் தோற்றம் கொண்ட கேபின் மற்றும் உட்புறத்தைப் பெறுகிறது.
1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் லிட்டருக்கு சுமார் 27 முதல் 28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கலாம் என்பது இதன் சிறப்பு.
இந்த கார் 4.2-4.3 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.
முன்பக்கம் பின்பக்கம் எல்இடி லைட், டிஆர்எல்எஸ் வசதிகள், சிங்கிள் பேன் சன் ரூப், மல்டி ஸ்போக் அலாய் வீல், சதுர வடிவ வீல் ஆர்ச் கொண்டிருக்கும்.
டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் 5 ஸ்பீடு மேனுவல், சிவிடி மற்றும் இ-சிவிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்ககளும் இதில் வழங்கலாம் என தெரியவந்துள்ளது.
டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதி, கனெக்டிவிட்டி வசதிகள், வயர்லெஸ் போன் சார்ஜ்ர், சிங்கள் பேன் சன் ரூப் டிசைன் கொண்டிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments