அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - புகைப்படங்கள்
ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்.
சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா ரயில் நிலையத்தில், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, இளைஞர்கள் தீ வைத்த ரயிலில் இருந்து எழும் கரும்புகை மூட்டம்.சப்ரா ரயில் நிலையத்தில் அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்து போராட்டம் நடத்தினர்.போஜ்பூரில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, போராட்டக்காரர்களைக் கலைக்க, கண்ணீர்புகைப் பிரயோகம் செய்த காவலர்.
Advertisement
Advertisement
பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்திலுள்ள பாபுவா ரயில் நிலையத்தில், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் ரயிலின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.பீகார் மாநிலத்தில் பாபுவா ரயில் நிலையத்தில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய இளைஞர்கள்.'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஞ்சியில் இளைஞர்கள் போராட்டம்.
பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து அழைத்துச் செல்லும் காவல்துறையினர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.