சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகலில் அவர் காலமானார். அவருக்கு வயது 78.வேலூரில் இசைக் குடும்பத்தில், துரைசாமி ஐயங்கார் - பத்மாவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.இவரது இயற்பெயர் கலைவாணி.
Advertisement
Advertisement
1971ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில்தான் வாணி ஜெயராம் முதன் முதலில் அறிமுகமானார்.அன்று முதல் பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் அவரது குரல் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறது.குடியரசு தினத்தை முன்னிட்டு, வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விருதைப் பெறுவதற்கு முன்பாகவே அவர் மறைந்தது, ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.இன்று அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்.அவர் மறைந்தாலும், அவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள் மூலம் அவர் என்றென்றும் வாழ்வார் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.