நிசார் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. - -
புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.2,392 கிலோ எடை கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்பர்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
நிசார் செயற்கைக்கோள் மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெறமுடியும்.பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்களை அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும்.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன். - -
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் மிஷன் இயக்குனர் தாமஸ் குரியன். - -
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.