FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விண்ணில் பாய்ந்த தனியார் ராக்கெட் விக்ரம் 1 - புகைப்படங்கள்

விண்ணில் பாய்ந்த தனியார் ராக்கெட் விக்ரம்

இந்திய விண்வெளித் துறையில், தனியார் நிறுவனத்தால் முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் ஆர்பிட்டல் ராக்கெட் 'விக்ரம்-1' மதியம் 12.05-க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பகிர்:
வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த விக்ரம் - 1.
காலை 11.30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஏவுதல், மேகமூட்டமான வானிலை காரணமாக 35 நிமிடங்கள் தாமதமாகி, மதியம் 12.05 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய 'விக்ரம்-1' ராக்கெட், பூமியில் இருந்து 453 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள தாழ்வான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான, அதிகபட்சம் 350 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமார் 450 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தும் வகையில் விக்ரம்-1 வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீறிப் பாய்ந்த விக்ரம் - 1.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் 'விக்ரம்-1' ராக்கெட் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவன் குமார் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகிறார்.
விண்ணில் ஏவப்பட்ட போது பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் ஆரவாரம் செய்த பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments