காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகள் - புகைப்படங்கள்
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியில் இதுவரை இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது.
பெண்களுக்கான 71 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோவில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் ஜூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.பெண்களுக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Advertisement
Advertisement
பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கனடாவின் மாயா லேலோர்.வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரியாவின் தைவோ லியாடி, தங்கப் பதக்கம் வென்ற கனடாவின் மாயா லேலோர் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற நராவ்வின் மாக்சிமினா யூபா.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லான் பவுல்ஸ் மகளிர் ஃபோர்ஸ் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கே.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.