FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

30.8.1976: வெளிநாடுகளில் இந்திய பாங்குகள் அதிகரிப்பு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

30.8.1976 - Dinamani
பகிர்:

புதுடில்லி, ஆக. 29 - கடந்த 3 ஆண்டுகளில் அதிக வெளிநாடுகளில் இந்திய பாங்குகள் வியாபித்திருக்கின்றன. டிபாசிட்டுகள் திரட்டுதல், கடன்கள் வழங்குதல், நிகர லாபம் தேடுதல் ஆகிய எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதியன்று வெளிநாடுகளில் இந் திய பாங்குகளின் 79 கிளைகள் இருக்கின்றன. 1973-இல் 11 நாடுகளில் 47 கிளைகள் இருந்தன. வெளிநாடுகளில் இந்திய பாங்குகள் பெற்ற டிபாசிட்டுகள் இந்த 3 ஆண்டுகளில் ரூ. 261 கோடியிலிருந்து ரூ. 680 கோடியாக உயர்ந்தன. அவை வழங்கிய கடன்கள் ரூ. 219 கோடியிலிருந்து ரூ. 612 கோடியாக உயர்ந்தன.

பீரிட்டன், மலாசியா, ஹாங் காங், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, பிஜி தீவுகள், மோரிஸ், கெனியா, உகாண்டா, தாய்லாந்து, நைஜீரியா முதலிய நாடுகளில் இந்திய பாங்குகள் இருக்கின்றன.

இந்தியாவில் வெளிநாட்டு பாங்குகள்

Advertisement

Advertisement

12 வெளிநாட்டு பாங்குகளுக்கு இந்தியாவில் மாநகர்களிலும் துறைமுகப்பட்டினங்களிலும் 128 கிளைகள் இருக்கின்றன.

அவைகளின் டிபாசிட்டுகள் 1969 லிருந்து 1975 வரை ரூ. 478 கோடியிலிருந்து ரூ. 842 கோடி வரை பெருகியிருக்கின்றன. நாட்டின் மொத்த பாங்க் டிபாசிட்டுகளில் இந்த டிபாசிட்டுகள் 1969 இல் 9.8 சதவிகிதமாக இருந்தன. 1975ல் 6.3 சதவிகிதமாகக் குறைந்து விட்டன.

வெளிநாட்டு பாங்குகள் வழங்கிய கடன்கள் 1969ல் ரூ. 408 கோடியாக இருந்தது. 1975 இல் ரூ. 620 கோடியாக உயர்ந்தது. இந்தியாவில் எல்லா ஷெட்யூல்ட் பாங்குகளும் வழங்கிய கடன்களில் அந்த வெளிநாட்டு பாங்குகள் வழங்கிய கடன்கள் 1969இல் 11.3 சதவிகிதமாக இருந்தன; 1975இல் அவை 6:3 சதவிகிதமாகக் குறைந்து விட்டன.

அதே சமயம் வெளிநாட்டு பாங்குகளின் லாபங்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றன. 1975இல் அது ரூ. 5.26 கோடி. ...

பிரான்ஸ் விமானத்தை கடத்த முயன்றவர் சரண்

ஹாங் காங், ஆக. 29 - சைகோன் விமான நிலையத்திலிருந்து 'ஏர் பிரான்ஸ்' விமானத்தை கடத்தமுயன்ற வியட்னாமியர் ஒருவர் பிறகு அதிகாரிகளிடம் சரணடைந்தார் என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.

பாங்காக் நேற்று பிற்பகலில் புறப்படும் விமானத்தில் வெடி குண்டுகளுடன் ஏறிய இந்த நபர் பயணிகள் அனைவரையும் பணய கைதிகளாக பிடித்தார்.

தாய்லாந்துக்கு செல்ல விசா கிடைக்காததால் தான் விமானத்தை கடத்தும் முயற்சியில் இறங்கியதாக கூறினார். இரவில் இவர் பிரயாணிகள், விமான ஊழியர் அனைவரையும் விடுவித்தார்.

summary

30.8.1976: Increase in Indian banks abroad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments