2.6.1976: கோயில்களில் நியமன டிரஸ்டிகள் பதவி இழப்பு - கணக்கை ஒப்படைக்க உத்தரவு
கோயில்களில் நியமன டிரஸ்டிகள் பதவி இழப்பு செய்யப்பட்டது பற்றி...
சென்னை, ஜூன், 1 - தமிழ்நாடு இந்து அறநிலைய திருத்த சட்டத்துக்கு ராஷ்டிரபதி அங்கீகாரம் அளித்துள்ளதைத் தொடர்ந்து அச்சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டு நியமன தர்மகர்த்தாக்கள் உடனடியாகப் பதவி இழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க தமிழ்நாடு அரசு மாற்று ஏற்பாட்டை அறிவித்துள்ளது.
கோயில்கள் 3 வகைப்படுத்தப்பட்டு ரூ. 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வருமானமுள்ள கோயில்கள் அனைத்துக்கும் இனி அரசே டிரஸ்டிகளை நியமிக்கும். நியமன டிரஸ்டிகள் உடனடியாகப் பதவி இழப்பதால் புதிய டிரஸ்டிகள் நியமிக்கப்படும் வரை கோயில்களின் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகள் அல்லது நிர்வாக அதிகாரி அல்லது அரசு நியமிக்கும் தகுந்த அதிகாரி கவனித்து வருவார்.
இச்சட்ட அமலின் விளைவாக இதற்கு முன்னர் 1959ம் ஆண்டு இந்து அறநிலைய சட்ட ஷரத்துகளின் கீழ் நியமிக்கப்பட்டு பதவி வகித்து வந்த எல்லா தர்மகர்த்தாக்களும் (பரம்பரை தர்மகர்த்தாக்களாக இல்லாதவர்கள்) உடனடியாகப் பதவி இழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கோயில், அறநிலைய தர்மகர்த்தாக் குழுக்கள் அல்லது டிரஸ்டிகளின் பதவி ரத்து செய்யப்பட்டு விட்டதால், காலி இடங்கள் நிரப்பப்படுகின்ற வரையில் இக்குழுக்கள் அல்லது டிரஸ்டிகளின் பணிகளை கவனித்து வருவதற்கான மாற்று ஏற்பாட்டையும் அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ஒரு கோயிலில் பரம்பரை தர்மகர்த்தா அல்லது பரம்பரை தர்மகர்த்தாக்கள் இருந்தால் அவர்கள் கோயில் நிர்வாகப் பணிகளைக் கவனித்து வருவர்.
அப்படி பரம்பரை தர்மகர்த்தா இல்லாவிடில் கோயில் நிர்வாக அதிகாரியோ அல்லது அந்த கோயில் எந்த வகையில் சேர்க்கப்பட்டது என்பதைப் பொறுத்து அரசினால் அல்லது அறநிலைய கமிஷனரால் அல்லது துணை கமிஷனரால் நியமிக்கப்படுகின்ற தகுதி வாய்ந்த ஒருவரோ கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருவார்.
கணக்கை ஒப்படைக்க உத்தரவு
உடனடியாகப் பதவி இழக்கின்ற நியமன தர்மகர்த்தா ஒவ்வொருவரும் தன் வசம்உள்ள அல்லது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கக்கூடிய கோயில் அறநிலையம் சம்பந்தப்பட்ட தஸ்தா வேஜுகளையும் கணக்குகளையும் சொத்துக்களையும் 10 நாட்களுக்குள்ளாக ஒப்படைத்தாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி ஒப்படைக்கத் தவறினால் 3 ஆண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 ஆயிரம் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. ...
2.6.1976: தமிழ்நாட்டில் 110 நகரசபைகளும் கலைக்கப்படுமா?
செங்கல்பட்டு, ஜூன். 1- தமிழ்நாட்டிலுள்ள 110 நகரசபைகளையும் கலைக்க அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
2 வாரங்களில் முடிவு எடுக்கப்படலாம் என்றும், அடுத்த தேர்தல்வரை நகரசபை கமிஷனர்கள் பொறுப்பு அதிகாரிகளாக இவற்றை கவனிப்பர் என்றும் தெரிகிறது.