22.11.1976: வருமானம், விலை கட்டுப்பாட்டுக்கு முதலில் கொள்கை வகுக்கவேண்டும் - பிரதமர் இந்திரா காந்தி
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

ஜவாஹர் நகர், நவ. 21 - இங்கு இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் தொடங்கியதும் அரசியல் தீர்மாளம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதற்கு முன்பாக, பிரதமர் இந்திரா காத்தி சுமார் முக்கால் மணி நேரம் முக்கிய உரை நிகழ்த்தினார்.
திட்டமிட்டு வருமானங்கள், விலைகள், தொழிற்சாலை நிலவரங்கள், நில உபயோகம் ஆகியவற்றின் மீது பொது கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார்.
"இத்தகைய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு முதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில், சரக்குகளின் விசைகள் நியாயமற்ற முறையில் உயர்ந்து விட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்தும் சக்தி அரசாங்கத்துக்கு இருக்கவேண்டும்" என்று அவர் கூறினார்.
Advertisement
Advertisement
"நில உபயோகத்துக்கு நாடு முழுதும் வியாபித்த திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். இதை அவசரப் பிரச்னையாகக் கருத வேண்டும்" என்று கூறிய பிரதமர், புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான பார்பாரா வார்டை மேற்கோள் காட்டினார். அரசரங்கத்தின் சில முயற்சிகளின் காரணமாக நிலத்தின் மதிப்பு உயரக்கூடும். அதன் மூலமாக ஒரு பாடும்படாத நிலச் சொந்தக்காரர்கள் லாபமடைய அனுமதிக்கக்கூடாது அவர் சொன்னார். ...
அ.இ.கா.க. அரசியல் தீர்மானம் நிறைவேறியது - அவசர நிலை நீடிப்பதற்கு ஆதரவு
ஐவஹர்நகர், நவ. 21 - இன்று இங்கு தொடங்கிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆறு மணி நேர விவாதத்திற்குப் பிறகு அரசியல் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
காலையில் காங்கிரஸ் தலைவர் டி.கே. பருவா கூட்டத்தை ஆரம்பித்து வைத்துப் பேசினார். பின்னர் பிரதமர் இந்திரா காந்தி கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவரது உரை முடிந்ததும் அரசியல் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அரசியல் தீர்மானத்தை சிக்கிம் முதலமைச்சர் காஸிலேந்துப் டோர்ஜி முன்மொழிந்து பேசினார். விவாதத்தை முடித்து வைத்து மேற்கு வங்காள முதலமைச்சர் சித்தார்த்த சங்கர் ரே பேசினார். விவாதத்தின் இடையில் உள்துறை துணை மந்திரி ஓம் மேத்தா பேசினார். விவாதத்தில் மொத்தம் 40 உறுப்பினர்கள் பங்கு கொண்டார்கள்.
விவாதம் நடத்த ஆறு மணி நேரமும் பிரதமர் மேடையில் இருந்தார். இடையிலே சிறிது நேரம் காங்கிரஸ் தலைவர் பரூவா மேடையிலே இல்லாதபோது பிரதமர் கூட்டத்தை நடத்தினார்.
நாளை அ.இ.கா.க. கூட்டம் சர்வதேச நிலவரம், பொருளாதார நிலவரம் ஆகியவை பற்றி விவாதிக்க விருக்கிறது.
இன்றைய அரசியல் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்நியதன் மூலம் அரசியல் சட்டத் திருத்தங்கள், லோகசபை ஆயுள் நீடிப்பு, அவசர நிலை நீடிப்பு, ஆகியவற்றை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கீகரித்தது. ...