FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

29.9.1976: தமிழின் பேரால் விஷமப் பிரசாரம் - கலெக்டர்கள் மாநாட்டின் உள்துறை அமைச்சர் பேச்சு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

29.9.1976 - Dinamani
பகிர்:

தமிழ்நாடு கலெக்டர்கள் மாநாடு - மத்ய உள்துறை அமைச்சரின் யோசனைகள் - தமிழின் பேரால் விஷமப் பிரசாரம் பற்றி உஷார் தேவை என்கிறார்

சென்னை, செப். 28 - “தமிழுக்கு ஆபத்து என்று விஷமப் பிரசாரம் செய்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவோர், வதத்திகளைப் பரப்புவோர் ஆகியோர் விஷயத்தில் மாவட்டக் கலெக்டர்கள் மிக உன்னிப்பான கண்காணிப்பு வைத்து அத்தகையோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் கே. பிரும்மானந்த ரெட்டி கேட்டுக் கொண்டார்.

ஏனைய இந்திய மொழிகளைப் போல தமிழ் மொழியும் வளமும் வசதியும் பெற்று வளர வேண்டும் என்பதில் மத்திய சர்க்கார் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அவர் கூறினார். சுயநல நோக்குடன் மக்களை திசை திருப்பிப் பிராத்திய வெறி உணர்வுகளை வளர்க்க வழி செய்யும் தவறான பொய்ப் பிரசாரங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். தேச ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த வகையான பிரசாரம் அல்லது செயலுக்கும் இடமளிக்கலாகாது என்பதை அவர் வலியுறுத்தினர்.

Advertisement

Advertisement

மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரின் இரண்டு நாள் மகாநாட்டை இன்று காலை ராஜாஜி மண்டபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பிரும்மானந்த ரெட்டி துவக்கி வைத்தார். இம் மகாநாட்டிற்கு கவர்னர் சுகாதியா தலைமை வகித்தார். கவர்னரின் ஆலோசகர்களான பி.கே. தவே, ஆர்.வி. சுப்பிரமணியம், வருவாய்த்துறை வாரிய உறுப்பினர்கள், இலாகா செயலாளர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்ட்ரெய்னி, பிராத்தியத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள், மின்சார வாசியத் தலைவர் ஆபே இதில் கலந்து கொண்டனர். ...

திருவல்லிக்கேணியில் பாரதி வாழ்ந்த வீடு த.நா. அரசு வாங்கும் - பைகிராப்ட்ஸ் சாலைக்கு பாரதி பெயர் - கவர்னர் சுகாதியா அறிவிப்பு

சென்னை, செப். 28 - திருவல்லிக்கேணியில் மகாகவி சுப்ரமணிய பாரதி வசித்த வீட்டை தமிழக அரசு வாங்கி, அதனை நினைவு சின்னமாக்கும் என்று கவர்னர் மோகன்லால் சுகாதியா இன்று அறிவித்தார். பைகிராபட்ஸ் ரோடு பாரதி சாலை என்று இனி பெயரிடப்படும் என்றும் அவர் கூறினார்.

ராஜாஜி ஹால் அருகே பாரதியாரின் வாழ்க்கை பற்றிய ஒளி, ஒலி விளக்கக் காட்சியைத் துவக்கி வைத்து கவர்னர் பேசினார். இக்காட்சி ஒரு மாத காலம் நடைபெறும். பாரதி 39 காலமே வாழ்ந்தார். இக்குறுகிய காலத்தில் விலை மதிப்பற்ற தேச பக்தியை ஊட்டும், பொக்கிஷத்தை அவர் அளித்துச் சென்றார். அமரகவியின் பாடல்கள் தற்போது இளைஞர்கள் முதியோர் அனைவரது உதடுகளிலும் உள்ளன. கவியின் உள்ளத்திலிருந்து கிளம்பிய தேசபக்தி உணர்ச்சி வேகம் கவிதைகளாக மலர்ந்தது என்று கவர்னர் புகழ் அஞ்சலி செலுத்தினர். பாரதியார் பக்திப் பாடல்கள் பாடியிருப்பதையும் ககாதியா சுட்டிக் காட்டினார். பாரதியாரின் கவிதைகளில் நாட்டின் பெருமையை நன்கு எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பான அம்சம் என்றார். ...

summary

Malicious propaganda in the name of Tamil – Home Minister's speech at the Collectors' Conference

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments