முகப்பு
மருத்துவம்

செங்கல்பட்டில் மாபெரும் இலவச கண்புரை அறுவைச் சிகிச்சை முகாம்

செங்கல்பட்டு மகிந்திரா வேல்ட் சிட்டியில் மார்ச் 7 (சனிக்கிழமை) முதல் 12-ம் தேதி வரை மாபெரும் இலவச கண்புரை

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

செங்கல்பட்டு மகிந்திரா வேல்ட் சிட்டியில் மார்ச் 7 (சனிக்கிழமை) முதல் 12-ம் தேதி வரை மாபெரும் இலவச கண்புரை அறுவைச் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் - சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை - மகிந்திரா வேல்ட் சிட்டி ஆகியவை இணைந்து இந்த இலவச கண்புரை அறுவைச் சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இது தொடர்பாக, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மகிந்திரா வேல்ட் சிட்டி நிர்வாகக் கட்டட வளாகத்தில் இந்த இலவச கண்புரை அறுவைச் சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மார்ச் 7-ம் தேதி முதல் மார்ச் 12-ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

முகாமில் பங்கேற்போருக்கு இலவசமாக கண் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். முகாமில் பங்கேற்போர், பிற நோய்களுக்கு மாத்திரைகள் சாப்பிடும் நிலையில் அவற்றை எடுத்து வருவது நல்லது.

அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோருக்கு நகரும் வாகனத்தில் மொபைல் ஐ சர்ஜிக்கல் பஸ் யூனிட்டில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும். கண்புரை அறுவை சிகிச்சைக்கென இரண்டு வாகனங்கள் செயல்படும். முகாமில், அறுவைச் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, மார்ச் 10 (செவ்வாய்க்கிழமை) முதல் மார்ச் 14-ம் தேதி வரை மேலே குறிப்பிட்ட வாகனங்களில் இலவசமாக கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.

முற்றிலும், தையல் இல்லாத நவீன முறையில் (மைக்ராஸ்கோப்பிக் ஸ்மால் இன்ஸிஷன்) அறுவைச் சிகிச்சை செய்யப்படும். அறுவைச் சிகிச்சை செய்துகொள்வோருக்கு செயற்கை விழி லென்ஸ் (ஐஓஎல்) இலவசமாக வழங்கப்படும். கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 2 மணி நேரத்தில் நோயாளி வீடு திரும்பலாம்.

இந்த முகாமில் பங்கேற்கும் வகையில் முன்பதிவு செய்துகொள்ள 9952945758, 9884563183 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →