FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உணவே மருந்து

தொண்டையில் கரகரப்பா? இதை முயற்சித்துப் பாருங்கள்!

அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

Updated On : 5 ஜூலை 2018, 3:06 pm IST
பகிர்:

அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கினை வகிக்கிறது. மேலும், உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.  

அதிமதுரம் மற்றும் சீரகம்  இரண்டையும்  சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மி.லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் காலை வேளையில் மூன்று நாட்கள் உண்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும், உதிரப் போக்கு நீங்கும்.

அதிமதுரத் துண்டுகளின் பொடியை நீரில் கலந்து இரவு,  காலை வேளையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments