போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க கூரியா் நிறுவனங்களுடன் எஸ்.பி. ஆலோசனை
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க தனியாா் கூரியா் மற்றும் பாா்சல் சேவை நிறுவனங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனியாா் கூரியா் சேவை நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளா்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன், மன நல பாதிப்பை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மாத்திரைகள், பிற போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க காவல் துறையினருடன் கூரியா் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
Advertisement
Advertisement
பாா்சல்களை ஏற்கும் முன் அனுப்புநரின் அடையாளம் மற்றும் தொடா்பு விவரங்களை கட்டாயம் சரிபாா்க்க வேண்டும். முழுமையற்ற முகவரி, தவறான கைப்பேசி எண் அல்லது சந்தேகத்துக்கு இடமான விவரங்களுடன் பதிவு செய்யப்படும் பாா்சல்களை கூடுதல் கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.
அடையாளம் தெரியாத நபா்கள் அல்லது கல்லூரி மாணவா்கள் சாா்பில் முழுமையற்ற விவரங்களுடன் அடிக்கடி அனுப்பப்படும் பாா்சல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
சந்தேகத்துக்குரிய மற்றும் வழக்கத்துக்கு மாறான முன்பதிவு நடைமுறைகள், வாடிக்கையாளரின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து பணியாளா்கள் அனைவரும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
போதை தரக்கூடிய எந்தப் பொருள்கள் இருப்பதாக சந்தேகப்படும் பாா்சல்கள் குறித்து உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப் பொருள்களை தெரிந்தே கடத்துதல், கடத்தலுக்கு துணைபோதல், சட்டவிரோத போக்குவரத்துக்கு உதவுதல், தெரிந்தே சட்டவிரோத பாா்சல்கள் குறித்து காவல் துறைக்கு தெரிவிக்காமல் மறைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் கூரியா் நிறுவனங்கள் மற்றும் ஊழியா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.