முகப்பு
உணவே மருந்து

கண் பார்வைத் திறனை கூர்மையாக்க உதவும் அருமருந்து

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் பார்வைத் திறனைக் கூர்மையாக்க இந்த அருமருந்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் பார்வைத் திறனைக் கூர்மையாக்க இந்த அருமருந்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

தேவையான பொருள்கள்

கருஞ்சீரகம்   -     150  கிராம்

பொன்னாங்கண்ணிக் கீரைச் சாறு - அரை லிட்டர்

செய்முறை

முதலில் கருஞ்சீரகத்தைச் சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். பொன்னாங்கண்ணிக் கீரையைத் தேவையான அளவு எடுத்து பழுப்பான இலைகளை எல்லாம் நீக்கி நல்ல இலைகளை ஆய்ந்து சுத்தப்படுத்தி மிக்ஸியில் போட்டு  அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும்.

பின்பு பொன்னாங்கண்ணிக் கீரைச் சாறுடன் கருஞ்சீரகத்தைச் சேர்த்து நன்கு ஊறவைத்து பின்பு நன்கு உலர வைக்கவும். நன்கு உலர்ந்த பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் கண் பார்வைத் திறனைக் கூர்மையாக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால்  துன்பப்படுபவர்கள் இந்த வகைச் சூரணத்தைத் தயார்செய்து  தினமும் அதிகாலை வேளையில் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து  சுடுநீரில் கலந்து குடித்து வரவும். முதல் 48 நாள்கள் தொடரவும். பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும். நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

முழு கட்டுரையைப் படிக்க →