முகப்பு
உணவே மருந்து

தோல் நோய்களைப் போக்க உதவும் அற்புத கீரை

அக்கி மற்றும் தேமல், படை போன்ற தோல் சார்ந்த குறைபாடுகளுக்கு பல முறைகளைக் கையாண்டும் முறையான பலனைப் பெற முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும் அற்புதமான அருமருந்து.

Updated On : 28 மார்ச் 2022, 1:06 pm IST
பகிர்:

தேவையான பொருட்கள்

பருப்புக் கீரை  -  தேவையான அளவு

மஞ்சள்         -   சிறிதளவு

Advertisement

Advertisement

செய்முறை

முதலில் தேவையான அளவு பருப்புக் கீரை எடுத்து ஆய்ந்து  பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சுத்தப் படுத்திய பருப்புக் கீரையுடன் சிறிதளவு மஞ்சளையும் வைத்து அரைத்து விழுதாக்கி எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

அக்கி மற்றும் தேமல், படை போன்ற தோல் சார்ந்த குறைபாடுகளுக்கு பல முறைகளைக் கையாண்டும் முறையான பலனைப் பெற முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும் அற்புதமான மேற்பூச்சாக பயன்படுத்தும் மருந்து.

எடுக்கும் முறை

இவ்வாறு மேற்கூறிய முறையில் தயாரித்த  பருப்புக் கீரை விழுதைத்  தோல் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்கள் தினமும் மேற்பூச்சாக போட்டு வரவும். நீங்கள் எதிர்பாராத பலனைத் தரக்கூடியது பருப்புக் கீரை.

இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell : 96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.