சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை: மேலும் 3 வீரர்கள் பலி
சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகளுடன் நடைபெற்றுவந்த மோதலில் சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்
சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகளுடன் நடைபெற்றுவந்த மோதலில் சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 வீரர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சுக்மா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நக்ஸலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிஆர்பிஎஃப் படையின் கோப்ரா பிரிவு கமாண்டோ வீரர்கள் வியாழக்கிழமை தப்பாநார்கா வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு கோப்ரா பிரிவு வீரர்களும் சுட்டனர். இந்தச் சண்டையில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இந்தச் சண்டையில், கோப்ரா பிரிவு வீரர்கள், சத்தீஸ்கர் மாநில போலீஸார் உள்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட நக்ஸலைட் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த வீரர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.