கனமழை: கொச்சி செல்ல வேண்டிய விமானம் சென்னையில் தரையிறக்கம்
சவுதி அரேபியாவில் இருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம் கொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னை: சவுதி அரேபியாவில் இருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம் கொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னையில் தரையிறக்கப்பட்டது.
கேரளாவில் கொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம், அப்பகுதியில் கன மழை பெய்ததால் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
Advertisement
Advertisement
உடனடியாக சவுதி ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் வந்த 290 பேர் 10 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.