FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

என்ஆர்சி விவகாரத்தில் மம்தாவுக்கு எதிர்ப்பு: திரிணமூல் தலைவர்கள் ராஜிநாமா

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா கொண்டுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து அக்கட்சி நிர்வாகிகள் 3 பேர் பதவி விலகியுள்ளனர். குறிப்பாக, அஸ்ஸாம் மாநில திரிணமூல்

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 12:46 am IST
பகிர்:


அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா கொண்டுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து அக்கட்சி நிர்வாகிகள் 3 பேர் பதவி விலகியுள்ளனர். குறிப்பாக, அஸ்ஸாம் மாநில திரிணமூல் காங்கிரஸ் தலைவர் திவைபன் பதக், தனது கட்சி பொறுப்புகள் அனைத்தையும் துறப்பதாக அறிவித்திருப்பது மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் அஸ்ஸாமில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தலைமுறை கடந்து அங்கு இருப்பதால், அவர்கள் அனைவரும் தங்களை இந்தியர்கள் என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இந்நிலையில், அஸ்ஸாமில் வசிக்கும் உண்மையான இந்திய குடிமக்கள் எவர்? என்பதை அறிவதற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதுதொடர்பான வரைவு பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், ஏறத்தாழ 40 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
இதற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அஸ்ஸாம் மாநிலத்தில் நிலைமையை ஆராய பிரதிநிதிகள் குழுவையும் அவர் அனுப்பினார். மம்தாவின் இந்த நடவடிக்கைக்கு அஸ்ஸாம் மாநில திரிணமூல் காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக மாநில கட்சி தலைவர் திவைபன் பதக், நிர்வாகிகள் திகந்தா சைகியா, பிரதீப் பச்சானி ஆகியோர் தங்களது கட்சி பதவிகளை ராஜிநாமா செய்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலத்தின் உண்மை நிலையை ஆராயாமல் மம்தா தவறான நிலைப்பாட்டை கொண்டிருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments