FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை நிகழ் நிதியாண்டுக்குள் வழங்கப்படும்: மாநிலங்களவையில் தகவல்

தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்காக அளிக்கப்படும் நிதியுதவியின் நிலுவைத்

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:19 am IST
பகிர்:

தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்காக அளிக்கப்படும் நிதியுதவியின் நிலுவைத் தொகை நிகழ் நிதியாண்டுக்குள் அளிக்கப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது பஞ்சாப் மாநில எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை மத்திய அரசு எப்போது அளிக்கும் என்று உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் விஜய் சாம்பலா அளித்த பதில்:
மாநில அரசுகள் மூலமாக அளிக்கப்பட வேண்டிய உயர் கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான நிலுவையில் இருக்கும் கல்வி உதவித் தொகை நிகழ் நிதியாண்டுக்குள் அளிக்கப்படும். நிலுவைத் தொகையைப் பெற தேவையான ஆவணங்களை அனைத்து மாநில அரசுகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் ரூ.327 கோடி அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, நிலுவையில் உள்ள உதவித் தொகை அளிக்கப்படும் என்று விஜய் சாம்பலா பதிலளித்தார்.
மற்றொரு கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்படும் தொகை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக பிரத்யேக இணையதளம் உள்ளது' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments