நாங்கள் இருக்கும் வரையில் கர்நாடகத்தை பிரிக்க விட மாட்டோம்
நானும், எனது மகனும் இருக்கும் வரையில் கர்நாடகத்தை இரண்டாகப் பிரித்து, தனி வடக்கு கர்நாடக மாநிலம் உருவாக விட மாட்டோம். வடக்கு கர்நாடக மக்கள் பாஜகவின் தூண்டுதலுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று முன்னாள்
நானும், எனது மகனும் இருக்கும் வரையில் கர்நாடகத்தை இரண்டாகப் பிரித்து, தனி வடக்கு கர்நாடக மாநிலம் உருவாக விட மாட்டோம். வடக்கு கர்நாடக மக்கள் பாஜகவின் தூண்டுதலுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெச்.டி.தேவெ கெளடா கூறினார்.
வடக்கு கர்நாடகத்துக்கு தனி மாநில அந்தஸ்து கோரி 13 மாவட்டங்களில் முழு அடைப்பு நடத்த, உத்தர கர்நாடக பிரத்யேக ராஜ்ய ஹொரதா சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தேவெ கெளடா இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து, தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தனி வடக்கு கர்நாடகம் கோரும் நபர்களுக்கு ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். நானும், எனது மகனும் இருக்கும் வரையில் தனி வடக்கு கர்நாடகம் உருவாகும் பேச்சுக்கே இடமில்லை.
மாநில பட்ஜெட்டின்போது, நிதி ஒதுக்கீட்டில் வடக்கு கர்நாடகத்துக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படவில்லை. அதுபோன்ற தவறான பிரசாரத்தின் மூலமாக பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா வடக்கு கர்நாடகப் பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான இடங்களை வென்றும், ஆட்சி அமைக்க முடியாமல் போன கோபம் எடியூரப்பாவுக்கு இன்னும் குறையவில்லை. அதனால் அவர் விவசாயக் கடன் தள்ளுபடி, மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களைக் கொண்டு மக்களைத் தூண்டிவிடுகிறார்.
கர்நாடகத்தை ஒன்றிணைக்க பல தலைவர்கள் தியாகம் செய்துள்ளனர். மக்கள் போலியான தூண்டுதலுக்கு ஆளாகிவிடாமல், தற்போதைய அரசை நம்ப வேண்டும். முதல்வர் குமாரசாமி, சில முக்கிய அரசு அலுவலகங்களை பெலகாவியில் உள்ள தலைமைச் செயலக கட்டடத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார் என்று தேவெ கெளடா கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.