FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விவசாயிகள் வருவாயை அதிகரிக்க ஒருங்கிணைந்த வேளாண்மை முறை: மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில், நிலம்சார் ஒருங்கிணைந்த வேளாண் முறையை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறினார்.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:12 am IST
பகிர்:


விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில், நிலம்சார் ஒருங்கிணைந்த வேளாண் முறையை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறினார்.
ஒருங்கிணைந்த வேளாண்மை முறை என்பது, பயிர்களையும், அதன் சூழலியலையும் அறிந்து, நிலைத்திருக்கும் வகையிலான வேளாண்மையை முழுமையாக இயற்கை முறையில் மேற்கொள்வதாகும்.
இதுகுறித்து, வேளாண் அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
2022-ஆம் ஆண்டுக்குள்ளாக விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய, மாநிலங்கள் தங்களது நிலம்சார்ந்த ஒருங்கிணைந்த விவசாய முறையை ஊக்குவிக்க வேண்டும். உற்பத்தியை அதிகரித்தல், லாபம் ஈட்டுதல், மறுசுழற்சி முறையில் செலவுகளைக் குறைத்தல், சூழலியல் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய பல்வேறு நோக்கங்களை ஒருங்கிணைந்த வேளாண்மை முறையின் மூலமாக எட்ட இயலும்.
சிறிய அளவிலான விவசாயமானது (2 ஹெக்டேர் வரையில்), நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதாக உள்ளது. எனவே, நிலம்சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண்மை அவசியமானதாகும். 
அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது பகுதி நிலத்துக்கு உகந்த வகையிலான ஒருங்கிணைந்த வேளாண் முறையை ஊக்குவிக்க வேண்டும். 
பயிர் விவசாயம் செய்வதோடு, கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு ஆகிய பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமாக விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்று எம்.பி.க்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 பொருளாதார கணக்கெடுப்பின்படி, 10 ஆண்டுகளில் பயிர் விவசாயம் மூலமாக விவசாயிகளின் வருவாய் 1 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ள நிலையில், கால்நடைகள் வளர்ப்பு மூலமாக 7 சதவீதம் அளவுக்கு விவசாயிகளின் வருவாய் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் ராதா மோகன் சிங் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments