FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2018, 6:16 pm IST
பகிர்:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையங்களுக்கு நிகராக, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் அரசமைப்பு அந்தஸ்து அளிக்கும் வகையிலான இந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.

அங்கு எதிர்க்கட்சிகள் வழங்கிய சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டு அந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதா, திருத்தங்கள் மீதான ஒப்புதலுக்காக மீண்டும் மக்களவைக்கு அனுப்பப்பட்டது. அந்தத் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அங்கு இந்த மசோதா அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது இந்திய அரசமைப்பின் 123-ஆவது சட்ட திருத்த மசோதாவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments