FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65% பேர் இளைஞர்கள்

ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65% பேர், 18 முதல் 35 வயதுக்குள்ளான இளைஞர்கள் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65% பேர், 18 முதல் 35 வயதுக்குள்ளான இளைஞர்கள் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் வியாழக்கிழமை கட்கரி பேசியதாவது:
ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65% பேர், 18 முதல் 35 வயதுக்குள்ளான இளைஞர்கள் ஆவர். இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், அடிக்கடி விபத்துகள் நிகழும் 786 ஆபத்தான இடங்கள்' கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் உள்ள சாலைக் கட்டுமானக் குறைபாடுகளைக் கண்டறிந்து, போக்குவரத்து அமைச்சகம் அதனைச் சரிசெய்து வருகிறது. 
ஒரு சில இடங்களில் மட்டும் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளைக் குறைக்க, மக்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் இயக்குவதையும், கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்கள் இயக்குவதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட , ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஒத்துழைக்க வேண்டும். இந்த மசோதா நிறைவேறினால், சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும்.
வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறையைத் தனியாருக்கு அளிப்பதன் மூலம், மசோதாவானது மாநில உரிமைகளைப் பறிக்க முயல்வதாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிலரும், எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
இது முற்றிலும் தவறான புரிதல் ஆகும். புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின் கீழ் மாநில அரசுகளின் உரிமைகள், எவ்வித சூழலிலும் பறிக்கப்படாது என்று கட்கரி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments