FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிராந்திய கட்சிகளின் கணக்கில் வராத வருவாய் ரூ.77 கோடி: ஆய்வறிக்கையில் தகவல்

நாட்டில் உள்ள 29 பிராந்திய கட்சிகள், கணக்கில் வராத வழிகளில் இருந்து, கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் ரூ. 77 கோடி நன்கொடை திரட்டியதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


நாட்டில் உள்ள 29 பிராந்திய கட்சிகள், கணக்கில் வராத வழிகளில் இருந்து, கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் ரூ. 77 கோடி நன்கொடை திரட்டியதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோசியேஷன் ஃபார் டெமாக்ரேட்டிக் ரிஃபார்ம்ஸ்' என்று அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
முதலில் 37 பிராந்தியக் கட்சிகளின் வருவாய் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அவற்றில், 29 கட்சிகள் மட்டுமே தங்களது வருமான வரி கணக்கு, நன்கொடையாளர்களின் விவரம் ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளன. எஞ்சிய 8 கட்சிகள், வருமான வரி கணக்குகளையும், நன்கொடையாளர்களின் விவரங்களையும் தாக்கல் செய்யவில்லை.
எனவே, 29 பிராந்திய கட்சிகளின் வருவாய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில், இந்த கட்சிகளின் மொத்த வருவாய் ரூ. 347.74 கோடியாகும். இந்தத் தொகையில், தெரிந்த நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ. 91.29 கோடி (26.25 சதவீதம்) பெறப்பட்டுள்ளது. இதுதவிர, உறுப்பினர் கட்டணம் வசூலிப்பு, சொத்துகள் விற்பனை, வங்கி வட்டி, நூல்கள் விற்பனை ஆகியவற்றின் மூலம் பிராந்திய கட்சிகளுக்கு ரூ. 179.37 கோடி (51.58 சதவீதம்) வருவாய் கிடைத்துள்ளது.
எனினும், கணக்கில் வராத வழிகளில் ரூ. 77.08 கோடி (22 சதவீதம்) வருவாய் கிடைத்துள்ளது. இந்தத் தொகையில், ரூ. 76 கோடி தாமாக முன்வந்து அளிக்கப்பட்ட நன்கொடையாகும்.
சிவசேனை, சிரோமணி அகாலி தளம், சமாஜவாதி கட்சி, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை, ராஷ்ட்ரீய லோக் தளம், கேரள காங்கிரஸ் (மாணி) ஆகிய கட்சிகள் தங்களது நன்கொடையில் 83 சதவீதத்தை பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து பெற்றதாக அறிவித்துள்ளன. 16 பிராந்திய கட்சிகள், தங்கள் நன்கொடையில் 84 சதவீதத்தை தனி நபர்களிடம் இருந்து பெற்றதாக அறிவித்துள்ளன.
அரசியல் கட்சிகளின் மொத்த வருவாயில், பெரும் தொகை கணக்கில் வராத வழிகளில் நன்கொடையாக வந்துள்ளது. அந்த நன்கொடையை கொடுத்தவர் யார் என்ற விவரத்தைப் பெற முடியவில்லை. எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெறும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய நன்கொடையாளர்களின் விவரங்களை வைத்திருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments