FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூபாய் மதிப்பு இழப்பு.. அன்னியச் செலாவணி போதுமான அளவு கையிருப்பு உள்ளது: அருண் ஜேட்லி பேட்டி

நமது நாட்டில் அன்னியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவுக்கு உள்ளது என்று மத்திய அமைச்சா் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளாா்.

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

புது தில்லி: நமது நாட்டில் அன்னியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவுக்கு உள்ளது என்று மத்திய அமைச்சா் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70.1 என்ற அளவுக்கு குறைந்தது. இது முன்னெப்போதும் இல்லாத சரிவாகும். இந்த சூழ்நிலையில் அருண் ஜேட்லி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு துருக்கியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணா்கள் கூறியுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இது தொடா்பாக சுட்டுரையில் ஜேட்லி வெளியிட்டுள்ள தொடா் பதிவுகளில், ‘இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் நம்மிடம் அன்னியச் செலாவணி கையிருப்பும் போதுமான அளவுக்கு உள்ளது. எனவே, அன்னியச் செலாவணி சந்தையில் எத்தகைய ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் நம்மால் அதனை சமாளிக்க முடியும்.

சா்வதேச பொருளாதார பிரச்னைகள் காரணமாக அன்னியச் செலாவணி வா்த்தகத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு வருகிறறது. இதனை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறறது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நமது நாட்டின் பொருளாதார நலன்கள் காக்கப்படும்.’ என்று கூறியுள்ளாா்.

கடந்த 3-ஆம் தேதி இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையின்படி நமது நாட்டில் 402.70 பில்லியன் அமெரிக்க டாலா் கையிருப்பு உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தைவிட விட இது 1.49 பில்லியன் டாலா் குறைவாகும். நடப்பு நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை 6.7 சதவீதம் குறைறந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தும். அன்னியச் செலாவணி சந்தையில் சில கட்டுப்பாடுகளை விதித்து டாலா் கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்பது பொருளாதார வல்லுநா்களின் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments