FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காஷ்மீர் ஆளுநருடன் பிடிபி குழுவினர் சந்திப்பு: சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவளிக்க கோரிக்கை

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவை, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) குழுவினர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவை, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) குழுவினர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
அப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், சட்டப்பிரிவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, பிடிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் 
ஒருவர், ஸ்ரீநகரில் கூறியதாவது:
பிடிபி மூத்த தலைவர் அப்துல் ரஹ்மான் வீரி தலைமையில் குலாம் நபி லோன், அஷ்ரஃப் மீர், மெஹபூபா பெக், நிஜாமுதீன் பட் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆளுநரை சந்தித்தனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து ஆளுநரிடம் அந்தக் குழுவினர் கவலை தெரிவித்தனர். மாநிலத்தில் வளம் மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டுமெனில், 35-ஏ சட்டப்பிரிவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆளுநரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளை ஆளுநர் எடுப்பார் என்று பிடிபி குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். 
மேலும், பிடிபி ஆட்சிக் காலத்தின்போது முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை வேகப்படுத்த வேண்டும் எனவும் ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது என்றார் அந்த செய்தித்தொடர்பாளர்.
ஜம்மு-காஷ்மீரில் பிடிபி- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பின்னர், பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments