3 நாள்களாக ரத்து: அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்
காஷ்மீரில் நிலவிய மோசமான வானிலையின் காரணமாக, கடந்த 3 நாள்களாக ரத்து செய்யப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
காஷ்மீரில் நிலவிய மோசமான வானிலையின் காரணமாக, கடந்த 3 நாள்களாக ரத்து செய்யப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
காஷ்மீரில் நிலவிய மோசமான வானிலையின் காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதை கருத்தில் கொண்டு, அமர்நாத் யாத்திரை கடந்த 3 நாள்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், காஷ்மீரில் தட்ப வெப்ப நிலை வியாழக்கிழமை மீண்டும் சீரடைந்தது. இதைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
இதையடுத்து, ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து 28 வாகனங்களில் 548 யாத்ரீகர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
60 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை, கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. இதுவரையிலும் 2,80,384 பேர் அமர்நாத் குகைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.