லாலுவின் உடல்நிலை: மகன் தேஜஸ்வி கவலை
தனது தந்தை லாலு பிரசாத்தின் உடல்நிலை குறித்து பெரிதும் கவலையடைந்துள்ளதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
தனது தந்தை லாலு பிரசாத்தின் உடல்நிலை குறித்து பெரிதும் கவலையடைந்துள்ளதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
இதய நோய், சிறுநீரக பிரச்னை, ரத்த அழுத்தம் என பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள பிகார் முன்னாள் முதல்வர் லாலு, இப்போது மும்பையில் உள்ள ஆசியன் இதய நோய் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் உள்ள அவரை தேஜஸ்வி, திங்கள்கிழமை நேரில் சென்று பார்த்தார். அப்போது, தனது தந்தைக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தையின் உடல்நிலை பாதிப்புகள் குறித்து மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது. அவர் 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் பூரண உடல்நலன் பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் லாலு பிரசாத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காரணங்களுக்காக அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.