முகப்பு
இந்தியா

ஜீன்ஸ், கார்கோ பேண்ட்களை அணியக் கூடாது: அரசு உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை 

அரசு உயர் மட்ட கூட்டங்களின் பொழுது ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை அணியக் கூடாது என்று அரசு உயர் அதிகாரிகளுக்கு திரிபுரா மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Updated On : 28 ஆகஸ்ட் 2018, 2:01 pm IST
பகிர்:

அகர்தலா: அரசு உயர் மட்ட கூட்டங்களின் பொழுது ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை அணியக் கூடாது என்று அரசு உயர் அதிகாரிகளுக்கு திரிபுரா மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மாநில நிதி, கல்வி,  மற்றும் கலாச்சாரத் துறை முதன்மைச் செயலாளரான சுஷில் குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாவட்டத்திற்கு தலைமையாக இருக்கக் கூடிய மாவட்ட தலைமை நீதிபதிகள், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் ஆகிய இருவரும், மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் தலைமை வகிக்கும் உயர் மட்ட கூட்டங்களில் ஆடைக் கட்டுப்பாடு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுவான உடைகளான ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேண்ட்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

கடந்த மூன்று தலைமுறைகளாக அரசுப்  பணியில் இருக்கும் நான்,  எந்த ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியோ அல்லது மத்திய அரசு அதிகாரியோ அலுவலகங்களுக்கு டெனிம் பேண்ட் உள்ளிட்ட பொதுவான ஆடைகளை அணிந்து வந்ததை பார்த்தது கிடையாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டங்கள் நடைபெறும் பொழுது சில அரசு அதிகாரிகள் தங்களது அலைபேசிகளில் செய்திகளை பார்த்துக் கொண்டும், செய்திகளை அனுப்பிக் கொண்டும் இருப்பது அவமரியாதையான செயலாகும். என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே போல் ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை அணியக் கூடாது, குளிர் கண்ணாடிகளை அணியக் கூடாது என்று ஒரு அறிக்கை மத்தியப்பிரதேச அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments