கைதாகிறாரா உதயநிதி? பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சி: ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்று கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டிருக்கம் நிலையில், பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சி என ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தஞ்சையில், முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில், உதயநிதி விசாணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில், உதயநிதி, நாளை தொடங்கும் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டியிருக்கிறார்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாகத் தொடரப்பட்ட புகார்களில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டிப்பதாக கூறி, தஞ்சாவூரில் திமுக சாா்பில் பனகல் கட்டடம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
அப்போது தமிழக முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமரிசித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிறகு, உதயநிதி வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். உடனடியாக உதயநிதி தன்னுடைய வழக்குரைஞர்களுடன் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், உதயநிதியின் வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாகவும் பகல் 12 மணி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யத் திட்டமிடுவதன் மூலம், அவர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தடுக்க அரசு முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நாளை மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய தமிழக காவல்துறை மும்முரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
prevent from Udhayanidhi attending the Assembly R.S. Bharathi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.