FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளத்துக்கு கூடுதல் நிதி: ராஜ்நாத்திடம் வலியுறுத்தல்

கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி குழுவினர் தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை சந்தித்தனர்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய  கேரள மாநில அனைத்துக் கட்சி குழுவினர்.
பகிர்:

புது தில்லி: கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி குழுவினர் தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை சந்தித்தனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஏ.கே.அந்தோணி, கே.வி.தாமஸ், கே.சி.வேணுகோபால், கே.சுரேஷ், அன்டோ அந்தோணி எம்.கே.ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் பி.கருணாகரன், பி.கே.பைஜு, புரட்சிகர சோஷலிச கட்சி எம்.பி. என்.கே. பிரேமச்சந்திரன், கேரள காங்கிரஸ் மாணி பிரிவைச் சேர்ந்த ஜோஸ்.கே.மாணி, மார்க்சிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்.பி. ஜாய்சி ஜார்ஜ் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
ராஜ்நாத் சிங்கை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர்கள் பேசினர். அப்போது ஏ.கே.அந்தோணி கூறியதாவது:
கேரளத்தை மறுசீரமைக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சி வேறுபாடுகளை கடந்த நாங்கள் இணைந்துள்ளோம். கேரளத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், கேரளத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதற்கு உள்ள தடையை நீக்குமாறு உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேசுவதாக ராஜ்நாத் சிங் எங்களிடம் உறுதியளித்தார் என்றார்.
கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், சீனா சென்றுவிட்டதால் அனைத்துக் கட்சி குழுவில் அவர் இடம் பெறவில்லை என்று குழுவினர் தெரிவித்தனர். கேரளத்தில் வெள்ள சேதத்தை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பார்வையிட்ட பிறகு மத்திய அரசு ரூ.600 கோடியை விடுவித்துள்ளது. மத்தியக் குழு வெள்ளச் சேதத்தை மதிப்பிட்ட பிறகு கூடுதல் நிதி வழங்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஐக்கிய அரசு அமீரகம் கேரளத்துக்கு வெள்ள நிவாரணமாக ரூ.700 கோடி அளிக்க முன்வந்தது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து இயற்கை பேரிடர்களுக்கு நிவாரணத் தொகை பெறுவதில்லை என்ற கொள்கை அடிப்படையில் அதனை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments