FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புலந்த்சாஹர் வன்முறை அரசியல் சதி: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை ஒரு அரசியல் சதி திட்டம் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை ஒரு அரசியல் சதி திட்டம் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
புலந்த்சாஹர் மாவட்டத்தில் பசுவதைக் குற்றச்சாட்டால் ஏற்பட்ட வன்முறையில் காவலர் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். அந்த வன்முறையை அரசியல் சதி என்று யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைûயின் குளிர்காலக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முன்னாள் முதல்வர் என். டி. திவாரி, முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்பு அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், அவையின் 2-ஆவது நாளான புதன்கிழமை, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை, விவசாயிகள் பிரச்னைகள் ஆகியவற்றை முன்னுறுத்தி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளான சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து 3 முறை ஒத்தி வைக்கப்பட்டன. சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் புலந்த்சாஹர் குறித்து கேள்வியெழுப்பிய சமாஜவாதி கட்சியினர், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதையடுத்து மாநிலத்தின் இரு அவையின் நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
அரசியலில் வலுவிழந்தவர்களின் சதி திட்டத்தால்தான் புலந்த்சாஹர் மாவட்டத்தில் டிசம்பர் 3-ஆம் தேதி வன்முறை நிகழ்ந்துள்ளது. அரசியல் களத்தில் நேரடியாக போட்டியிட முடியாத கோழைகள் இந்த மாதிரியான சதியில் ஈடுபடுகிறார்கள். அவர்களது அரசியல் நிலைமை வலுவிழந்துள்ளதால் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக உள்ளனர். புலந்த்சாஹர் வன்முறை அரசியல் சதி என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசியல் சதியாளர்களின் திட்டத்தை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. எந்நேரத்திலும் எந்த சூழலிலும் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, புலந்த்சாஹர் வன்முறையை விபத்து என்று யோகி ஆதித்யநாத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments