FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: கூகுள் நிறுவனம் அறிவிப்பு

நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் இணையச் சேவை வழங்கும் மத்திய அரசின் ரெயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து இலவச வைஃபை' வசதி அளிக்கப்பட்டு வருவதாக இணையதள தேடுபொறி

Updated On : 8 ஜூன் 2018, 1:20 am IST
பகிர்:

நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் இணையச் சேவை வழங்கும் மத்திய அரசின் ரெயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து இலவச வைஃபை' வசதி அளிக்கப்பட்டு வருவதாக இணையதள தேடுபொறி நிறுவனமான கூகுள் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த 2016-ஆம் ஆண்டு மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் முறையாக இலவச வைஃபை சேவை ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, முதல் நாடுமுழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த வசதி செய்துதரப்பட்டது. அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகர் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில் நிலையத்துடன் சேர்த்து நாடு முழுவதும் மொத்தம் 400 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இணையத்துடன் தொடர்பின்றி இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை ஒன்றிணைக்கவே இந்த இலவச வைஃபை சேவை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதலாவது ஆண்டிலேயே பரபரப்பாக இயங்கும் முக்கியமான 100 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் 15ஆயிரம் பேர் முதல்முறையாக இணையச் சேவையை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தினர்.
ரயில் நிலையங்களில் ஒரு பயனாளிக்கு 30 நிமிடங்களுக்கு இலவசமாக வைஃபை வசதி அளிக்கப்படுகிறது.
19 முதல் 34 வயதுடையவர்கள் இந்த இலவச சேவையை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் இலவச வைஃபை சேவையை ரயில் நிலையங்களில் பெற்று பயன்பெறுகின்றனர்' என்று கூகுள் இந்தியா இயக்குநர் கே.சூரி தெரிவித்தார்.
ரயில்டெல் நிறுவன நிர்வாக இயக்குநர் கே.மனோகர் ராஜா கூறுகையில், உலகில் அதிவேகத்தில் அளிக்கப்படும் வைஃபை வசதி இதுதான்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments