முகப்பு
இந்தியா

ஹிஸ்புல் இயக்கத்தில் இணைந்தாரா காஷ்மீர் சிறப்பு காவல் அதிகாரி?: அதிர்ச்சித் தகவல் 

காஷ்மீரில் கடந்த வாரம் தனது துப்பாக்கியுடன் மாயமான சிறப்பு காவல் அதிகாரி ஒருவர், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து விட்டார் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.   

Updated On : 27 ஜூன் 2018, 4:10 pm IST
பகிர்:

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த வாரம் தனது துப்பாக்கியுடன் மாயமான சிறப்பு காவல் அதிகாரி ஒருவர், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து விட்டார் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது   

காஷ்மீர் மாநில சிறப்பு போலீஸ் படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர்  இர்பான் அகமது. இவர் கடந்த செவ்வாய் கிழமை மாலை, தனது பணிக்கான ஏகே 47 ரக துப்பாக்கியுடன் மாயமாகினார். எங்கே சென்றார் என்று தகவல் தெரியாத நிலையில், அவரைத் தேடும் பணியை பாதுகாப்பு படைகள் தொடங்கியது.

இந்நிலையில் சிறப்பு காவல் அதிகாரி இர்பான் அகமது தங்களது  ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து விட்டார் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது    

Advertisement

Advertisement

அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் அனைவரும் தங்களுடைய பணியை விட்டுவிட்டு தங்களது  இயக்கத்தில் இணைய வேண்டும் என்றும் அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.