FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இயக்குநர் கெளதமன் ஜாமீன் மனு தள்ளுபடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் போலீஸாரைத் தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இயக்குநர் கெளதமனின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட

Updated On : 29 ஜூன் 2018, 2:41 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் போலீஸாரைத் தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இயக்குநர் கெளதமனின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தின் போது போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது செந்தில்குமார் என்ற காவலர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இது குறித்து திரைப்பட இயக்குநர் கெளதமன் உள்ளிட்ட பலர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் போலீஸார் கெளதமனை கைது செய்தனர். இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கெளதமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கெளதமனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments