மார்க்சிஸ்ட், பாஜக தொண்டர்கள் கொலை: பினராயி விஜயனிடம் அறிக்கை கோரினார் ஆளுநர்
கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, முதல்வர் பினராயி
கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, முதல்வர் பினராயி விஜயனிடம் அந்த மாநில ஆளுநர் பி. சதாசிவம் அறிக்கை கோரியுள்ளார்.
கண்ணனூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் பாபு என்பவரும், பாஜக தொண்டர் சேமாஜ் என்பவரும் அடுத்தடுத்து கடந்த திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டனர். இந்த 2 கொலை சம்பவங்களிலும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, முதல்வர் பினராயி விஜயனை ஆளுநர் பி. சதாசிவம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தத் தகவலை கேரள மாநில ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
500 மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மீது வழக்கு: இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் பாபு கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டதாக அக்கட்சியினர் 500 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், பாபு கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக தொண்டர் சேமாஜ் கொலை சம்பவம் குறித்து 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கடந்த ஆண்டும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியது. இதுகுறித்து ஆளுநர் சதாசிவத்தை நேரில் சந்தித்து பாஜக தலைவர்கள் புகார் மனுவும் அளித்தனர்.
இதன்பின்னர், முதல்வர் பினராயி விஜயனிடம் ஆளுநர் சதாசிவம் கடந்த டிசம்பர் மாதம் அறிக்கை கோரினார்.
இதேபோல், கண்ணனூர் மாவட்டத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு ஆளுநர் சதாசிவம் கடந்த ஜனவரி மாதம் தனது கவலையையும் வெளிப்படுத்தியிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.