FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டு மாநாடு: மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

தில்லியில் சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார். 

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


தில்லியில் சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார். 
நீதி ஆயோக் அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த மாநாடு, மின்சாரம் மூலமாக இயங்கும் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை ஊக்குவிப்பதை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இரு நாள்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். அப்போது, மாற்று எரிபொருள்களுடன் இயங்கும் வாகனங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதை விரைவுபடுத்தும் திட்டத்தின் 2-ஆம் கட்டம் (ஃபேம் இந்தியா 2) குறித்து அவர்களுடன் ஆலோசிக்கிறார்.
இந்த மாநாடு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பொதுப் போக்குவரத்து மறுஉருவாக்கம், மாற்று எரிபொருள் உள்ளிட்ட 5 கருப்பொருள்களின் அடிப்படையில் மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவுள்ளது. மஹிந்திரா எலக்ட்ரிக், ஹீரோ சைக்கிள்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், ஓலா, மாருதி சுஸுகி, ஹோண்டா, டோயோடா, பாஷ், சன் மொபிலிடி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.
அதுதவிர, உலகெங்கிலும் உள்ள அரசின் தலைவர்கள், தொழில்துறை, ஆராய்ச்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ஆலோசனைக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 2,200 பேர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், இந்தியாவில் போக்குவரத்துக்கென ஒருங்கிணைந்த கொள்கைத் திட்ட வரைவை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது' என்றார்.
நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், இந்தியாவில் மக்கள் மேற்கொள்ளும் போக்குவரத்தை புதிதாக மாற்றி அமைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். ஒரு தேசம்-ஒரு அட்டை' என்ற திட்டம் அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ஒரு அட்டை மூலமாக அனைத்துவிதமான பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்கும் வசதி இதன்மூலம் அமல்படுத்தப்படும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments