முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல்: உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

நாடுமுழுவதும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், புதிய   உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2019 at 4:34 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:45 PM

புது தில்லி: நாடுமுழுவதும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், புதிய   உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே இத்தாக்குதலையடுத்து காஷ்மீர் மாணவர்கள் மீது பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த தாரீக் ஆதிப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் கடந்த 22-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க என்னென்னெ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் நாடுமுழுவதும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், புதிய   உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கானது புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது  மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 22-ஆம் தேதி உத்தரவிற்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது எந்த விதமான தாக்குதலும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கில் புதிய   உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்கள் இந்த வழக்கு தொடர்பாக எழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.