சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிப்பு
விண்கலத்திலிருந்து லேண்டர் பிரிக்கும் நிகழ்வை விஞ்ஞானிகள் திங்கள்கிழமை மேற்கொண்டனர்.
நிலவைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் இறுதி மற்றும் ஐந்தாவது கட்ட நீள்வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.
இதன் மூலம் நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 127 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக, மிக முக்கியமான விண்கலத்திலிருந்து லேண்டர் பிரிக்கும் நிகழ்வை விஞ்ஞானிகள் திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டனர். மதியம் 1:25 மணியளவில் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
லேண்டர் பிரிக்கப்பட்ட பின்னர், மேலும் இரண்டு முறை விண்கலத்தின் நீள்வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை செப்டம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.